சத்குரு ஸ்ரீ சத்ய சாயி பாபா நூற்றாண்டு விழா: சென்னை – சத்ய சாயி பிரசாந்தி நிலையம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை: சத்குரு ஸ்ரீ சத்ய சாயி பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை – சத்ய சாயி பிரசாந்தி நிலையம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சத்குரு ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் கூட்டத்தை சமாளிக்க, சென்னை எழும்பூர் மற்றும் சத்ய சாயி பிரசாந்தி நிலையம் இடையே சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.
பெட்டி அமைப்பு (Coach Composition): இந்தச் சிறப்பு ரயிலில் கீழ்க்கண்ட பெட்டிகள் இணைக்கப்படும்:
*AC டூ டயர் பெட்டி (AC Two Tier) - 1
*AC த்ரீ டயர் பெட்டிகள் (AC Three Tier) - 2
*ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் (Sleeper Class) - 8
*பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (General Second Class) - 8
*இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றது) - 2
ரயில் எண் 06065/06066 சென்னை எழும்பூர் - சத்ய சாயி பிரசாந்தி நிலையம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள்:
புறப்பாடு விவரங்கள் (சென்னை - சத்ய சாயி பிரசாந்தி நிலையம்)
ரயில் எண் 06065, வழித்தடம் - சென்னை எழும்பூர்-சத்ய சாயி பிரசாந்தி நிலையம் சிறப்பு எக்ஸ்பிரஸ். புறப்படும் நிலையம்- சென்னை எழும்பூர். புறப்படும் நேரம்- இரவு 23:55 மணி. புறப்படும் நாள் நவம்பர் 23, 2025 (ஞாயிறு). சேருமிடம் - சத்ய சாயி பிரசாந்தி நிலையம். சேரும் நேரம்- மறுநாள்
காலை 09:10 மணி.
திரும்பும் சேவை விவரங்கள் (சத்ய சாயி பிரசாந்தி நிலையம் சென்னை
ரயில் எண் 06066, வழித்தடம் - சத்ய சாயி பிரசாந்தி நிலையம் சென்னை எழும்பூர் சிறப்பு எக்ஸ்பிரஸ். புறப்படும் நிலையம் - சத்ய சாயி பிரசாந்தி நிலையம். புறப்படும் நேரம் - இரவு 21:30 மணி. புறப்படும் நாள் - நவம்பர் 24, 2025 (திங்கள்). சேருமிடம் - சென்னை எழும்பூர். சேரும் நேரம் - மறுநாள் காலை 11:30 மணி