சதானந்தகவுடாவிடம் ரூ.3 லட்சம் சைபர் மோசடி
பெங்களூரு: ‘ பாஜவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவிடமும் சைபர் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதுகுறித்து பெங்களூரில் சதானந்த கவுடா, கூறுகையில், ‘எனது 3 வங்கி கணக்குகள், சைபர் மோசடி கும்பலால் ‘ஹேக்’ செய்யப்பட்டன. எனது 3 வங்கி கணக்குகளில் இருந்தும் தலா ரூ.1 லட்சம் வீதம், ரூ. 3 லட்சம் ஜி பே, போன் பே மூலம் திருடியுள்ளனர் என்றார்.
Advertisement
Advertisement