பிசிசிஐ தலைவர் ஆகிறார் சச்சின்?
Advertisement
மும்பை: பிசிசிஐ தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி, 70 வயதான நிலையில் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, தற்போதைய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐயின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார். பிசிசிஐக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பிசிசிஐ புதிய தலைவராக இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, சச்சினுடன் பேச்சு வார்த்தை நடந்ததாகவும், அதற்கு, அவரும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
Advertisement