சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் கேரள சட்டசபையில் கடும் அமளி, தள்ளுமுள்ளு; சபை ஒத்திவைப்பு
Advertisement
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டுள்ள தங்கத் தகடுகள் மாயமான விவகாரத்தில் நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக கேரள சட்டசபையில் கடந்த இரு நாட்களாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் சட்டசபையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த இரு நாட்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேனர்களுடன் சபாநாயகரின் இருக்கை முன் நின்றுகொண்டு கோஷமிட்டனர். அப்போது சபை காவலர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சபாநாயகர் ஷம்சீர் சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
Advertisement