சபரிமலை கோயிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
திருவனந்தபுரம்: சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில் புதிய மேல்சாந்திகள் நேற்று தேர்வு செய்யப்பட்டனர். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களுக்கு அடுத்த 1 வருடத்திற்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு நடைபெற்றது. சபரிமலை கோயில் புதிய மேல்சாந்தியாக திருச்சூர் மாவட்டம் சாலக்குடியைச் சேர்ந்த பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பின் மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. இதில் கொல்லம் மாவட்டம் கூட்டிக்கடை பகுதியை சேர்ந்த எம்.ஜி.மனு நம்பூதிரி புதிய மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்கள் இருவரும் கார்த்திகை 1ம் தேதி முதல் பொறுப்பேற்பார்கள். அடுத்த 1 வருடத்திற்கு இருவரும் சபரிமலையில் தங்கியிருந்து முக்கிய பூஜைகளை நடத்துவார்கள். வரும் 22ம் தேதி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். 21ம் தேதி சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகள் நடை
பெறுகின்றன.