சபரிமலையில் பூஜை, தங்கும் அறைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் 20 ஆயிரம் பக்தர்களுக்கும் என ஒரு நாளைக்கு மொத்தம் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் பூஜைகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (5ம் தேதி) தொடங்குகிறது. பூஜைகளுக்கும், அறைகளுக்கும் www.onlinetdb.com என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Advertisement
Advertisement