அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்புப் பேருந்துகள் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், சேலம், கரூர் பகுதிகளில் இருந்தும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.28 முதல் ஜனவரி 16 வரை இயக்கப்பட உள்ளது. டிச.27 முதல் 30 வரை கோயில் நடை சாத்தப்படுவதால், இடைப்பட்ட அந்த நாட்களில் மட்டும் பேருந்து இயக்கப்படாது. www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
Advertisement
Advertisement