சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு: 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
கேரளா: துவார பாலகர் சிலையில் தங்கம் திருட்டு தொடர்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது. சபரிமலை சன்னிதானம் அமைந்திருக்கூடிய பகுதியில் 1998ஆம் ஆண்டு அந்த மேற்கூரை மற்றும் வாசப்படி, சன்னிதானம் அமைந்திருக்கக்கூடிய முன்பகுதியில் துவார பாலகர் சிலை இடங்களில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டது. இவற்றில் இருந்து தங்கம் திருட்டு பொய் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தான் கேரளாவில் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
துவார பாலகர் சிலையில் தங்க தகுடுகள் அதன் தரம் குறைந்துவிட்டது. அந்த தகரங்கள் பழுதடைந்தது இதை புதுப்பித்து தருகிறேன் என்று சொல்லி உன்னிகிருஷ்ணன் போத்தி என்பார் தகரத்தை எடுத்து சென்றதாகவும், அதுக்கு சில அதிகாரிகள் உடைந்தையாக இருந்ததாகவும் கூறித்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கானது விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மண்டலா பூஜை தொடங்கி இருக்கிறது. இன்றைக்கு இந்த இடத்திலிருந்து தங்க தகுடுகள் பாதிக்கப்பட்ட இடத்தை சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு நடத்தப்பட்டது .
மதியம் 1 மணிக்கு தொடங்கிய அறிவியல் ரீதியான ஆய்வு பிற்பகல் 3 மணி வரை நடைபெறது. தங்க முலாம் பூசப்பட்ட தகுடுகளில் தங்கத்தின் தரத்தை சோதனை செய்ய மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இன்றைக்கு 1 மணிக்கு மேல நடை அடைக்கப்பட்ட பிறகு 3 மணிவரை சபரிமலை சன்னிதானம் நடை அடைக்கப்பட்டு இருக்கும் இதன் காரணமாக பரிசோதனை அந்த நேரத்தில் வைத்து கொண்டால் பக்தர்களுக்கு இடையூறு இருக்காது சாமிதரிசனம் செய்யக்கூடிய பக்தர்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது என்ற காரணத்தால் 3 மணி வரை இந்த சன்னிதானம் அமைந்திருக்கக்கூடிய பகுதியில் இந்த சோதனையானது நடைபெற்றது.