சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிலைக்கு தங்கத் தகடு பதிக்க வைத்திருந்த 4 கிலோ தங்கம் காணாமல்போனது பற்றி விசாரணை..!!
கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிலைக்கு தங்கத் தகடு பதிக்க வைத்திருந்த 4 கிலோ தங்கம் காணாமல்போனது பற்றி விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோவிலில் துவாரபாலக சிலையின் மேல்பகுதியில் உள்ள மேற் கூரையில் தங்க முலாம் பூசப்பட்ட மேற்க்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில் தற்போது கேரள உயர்நீதிமன்றம் அது தொடர்பான மனுவை விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 வார காலத்திற்குள் தேவசம் விஜிலென்ஸ் அதிகாரி என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளது, இல்லையா என்பது தொடர்பான விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை அதிகார பூர்வமாக பிறப்பித்துள்ளது. மேற்க்கூரை அமைக்கும் பணியில் 4 கிலோ அளவிற்கு தங்கமானது கையாடல் செய்யப் பட்டுள்ளது என்ற புகாரின் அடிப்படையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவை கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.