மகளிர் ஒற்றையர் சர்வதேச தரவரிசையில் 60 வாரமாக நம்பர் 1 இடத்தில் நீடிக்கும் சபலென்கா
Advertisement
துபாய்: சர்வதேச டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் பெலாரசின் அரினா சபலென்கா 60வது வாரமாக நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார். 27 வயதான அரினா சபலென்கா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வுஹான் ஓபனில் பட்டம் வென்று ஸ்வியாடெக்கை பின்னுக்குதள்ளி நம்பர் 1 இடத்திற்கு முன்னேறினார். அப்போது முதல் இன்று வரை அவர் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துள்ளார்.
இதுவரை 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 64, செக் குடியரசின் கரோலின் வோஸ்னியாக்கி 71 வாரங்கள் முதலிடத்தில் நீடித்துள்ளனர். அவர்களை சாதனையை சபலென்கா முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
Advertisement