எஸ்ஏ20யில் வெல்வது யார்... வெளியே செல்வது யார்? சன்ரைசர்ஸ்-சூப்பர் கிங்ஸ் மோதல்
Advertisement
அவற்றில் ஒரு ஆட்டம் கைவிடப்பட எஞ்சிய 6 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 3 ஆட்டங்களில் வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளன. சன்ரைசர்ஸ் தொடர்ந்து 3வது முறையாகவும், சூப்பர் கிங்ஸ் 2வது முறையாகவும் பிளே ஆப் சுற்றில் களமிறங்கி உள்ளன. சன்ரைசர்ஸ் இதற்கு முன் விளையாடிய 2 பிளே ஆப் சுற்றுகளில் வென்று பைனலுக்கு முன்னேறி உள்ளது. 2 முறை கோப்பையை கைப்பற்றியது. சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே ஒரு முறை பிளே ஆப்பில் களம் கண்டது. அதில் சன்ரைசர்ஸ் அணியிடம் சரண்டரானது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் பதிலடி தரும் முனைப்பிலும், சன்ரைசர்ஸ் வெற்றி வரலாறை தொடரும் வேகத்திலும் களம் காண இருக்கின்றன.
Advertisement