எஸ்.பி.வேலுமணி மகன் திருமண வரவேற்பு: எடப்பாடியை சந்திக்காமல் புறக்கணித்த செங்கோட்டையன்
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், விஜயபாஸ்கர், பா.ஜ., எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், நடிகர்கள் சிவக்குமார், சத்தியராஜ், நடிகை கவுதமி உள்ளிட்டோர் நேரில் வாழ்த்தினர். விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 6.30 மணியளவில் வந்தார். அரை மணி நேரம் விழா அரங்கில் இருந்தார். பின்னர், காரில் புறப்பட்டு சென்றார். அவர் சென்ற பிறகு அரை மணி நேரம் கழித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார். எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கவே அவர் தாமதமாக வந்ததாக கட்சியினர் தெரிவித்தனர்.