2026 ஆம் ஆண்டிற்குள் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவுக்கு சப்ளை: ரஷ்யா அறிவிப்பு
மாஸ்கோ: இந்தியாவும், ரஷ்யாவும் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி செய்து கொண்ட ஒப்பந்தம் அடிப்படையில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான எஸ் - 400 வான்பாதுகாப்பு அமைப்புகள் 5 எண்ணிக்கையை இந்தியாவுக்கு சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது 4 வான்பாதுகாப்பு அமைப்புகள் சப்ளை செய்யப்பட்டு விட்டன. கடைசியாக 5வது வான்பாதுகாப்பு அமைப்பு அடுத்த ஆண்டு வழங்கப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
Advertisement
மே மாதம் ஆபரேஷன் சிந்தூரின் போது எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து எஸ் -400 வான் பாதுகாப்பு அமைப்பின் அடுத்த கட்டமான எஸ்- 500 அமைப்பை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
Advertisement