ரஷ்ய ஆயுத கிடங்கு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: ஏவுகணைகள், வெடிகுண்டுகள் அழிப்பு
Advertisement
உக்ரைன் எல்லையில் இருந்து 500 கிமீ தொலைவில் டோரோபெட்ஸ் நகர் உள்ளது. மொத்தம், 11,000 பேர் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் உள்ள ஆயுத கிடங்கை குறி வைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பல ஏவுகணைகள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் அழிக்கப்பட்டன என்று உக்ரைன் அதிகாரி தெரிவித்தார். தாக்குதலுக்குப் பிறகு, 6 கி.மீ பரப்பளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அந்த சமயத்தில் லேசான அதிர்வுகளும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆளில்லா விமானத் தாக்குதல் நடந்த இடத்தில் ரஷ்யாவின் சொந்த ஆயுதங்களை விட வட கொரியாவின் ஏவுகணைகளும் இருந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
Advertisement