ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விட்டதாக கூறும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க மோடிக்கு பயம்: காங்கிரஸ் சாடல்
புதுடெல்லி: “அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க பிரதமர் மோடி பயப்படுகிறார்” என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் தள பதிவில், “பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரை தானே தடுத்து நிறுத்தியதாக 53 முறை கூறிய அதிபர் டிரம்ப், தற்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா உறுதி அளித்துள்ளது என ஐந்து முறை கூறி விட்டார். இப்படி கூறிய டிரம்ப்பை நேரில் சந்திக்க பிரதமர் மோடிக்கு பயம். அதனால்தான் பிரதமர் மோடி ஆசியன் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள செல்லவில்லை. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை” என விமர்சித்துள்ளார்.
Advertisement
Advertisement