தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துங்கள்... இந்தியாவுக்கு மீண்டும் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை: வெளியுறவு துறை அமைச்சகம் பதிலடி

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ளாவிட்டால், கடுமையான வரிகளைச் செலுத்த நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். அவரது மிரட்டலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைன் போர் சூழலுக்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Advertisement

இதன் காரணமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜவுளி மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா வரியை 50 சதவீதமாக இரட்டிப்பாக்கியது. இந்நிலையில் நேற்று அதிபரின் சிறப்பு விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தப் பிரச்னையில் தனது நிலைப்பாட்டை மீண்டும் கடுமையாக வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்வதாக இந்தியப் பிரதமர் மோடி என்னிடம் தனிப்பட்ட முறையில் உறுதியளித்தார்.

ஆனால், அவர்கள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை தொடர்ந்தால், கடுமையான வரிகளைச் செலுத்த வேண்டியிருக்கும்’ என்று எச்சரித்தார். இந்தியா-ஆஸ்திரேலியா பாதுகாப்புப் பேச்சுவார்த்தை மற்றும் 2030ம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலர் வர்த்தகத்தை எட்டுவதற்கான அமெரிக்க-இந்திய பேச்சுவார்த்தை ஆகியவை முக்கிய கட்டத்தில் இருக்கும் நிலையில், டிரம்பின் இந்த திடீர் எச்சரிக்கை சர்வதேச அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக மறுத்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘அக். 19 அல்லது 20-ம் தேதிகளில் பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் தொலைபேசியில் பேசவில்லை. இரு தலைவர்களுக்குமான கடைசி உரையாடல் அக். 9ம் தேதி நடந்தது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை திடீரென நிறுத்தும் எண்ணம் இல்லை. இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு.

நிலையற்ற எரிசக்தி சூழலில், இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் தொடர்ச்சியான முன்னுரிமையாக இருந்து வருகிறது’ என்று குறிப்பிட்டார். இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக ரஷ்யாவே பூர்த்தி செய்கிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் இறக்குமதி 20% அதிகரித்து, நாளொன்றுக்கு 1.9 மில்லியன் பேரல்களாக உள்ளது.

இதன்மூலம் இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாயைச் சேமிப்பதுடன், உள்நாட்டுப் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்தி வருகிறது. ரஷ்ய இறக்குமதியை நிறுத்தினால், இந்தியாவின் வருடாந்திர எண்ணெய் செலவு 11 பில்லியன் டாலர் வரை உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், சீனா மற்றும் துருக்கி போன்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் தனது இறக்குமதிக் கொள்கையில் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

* சீனாவுக்கு நவ. 1 முதல் 155% வரி

அமெரிக்கா மற்றும் சீனா இடையே பல மாதங்களாக வர்த்தகப் போர் நீடித்து வருகிறது. சீனாவின் சில முக்கிய தாதுப் பொருட்களின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இந்த மோதல் மேலும் வலுத்தது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் இருதரப்பு அதிகாரிகளும் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர். இந்நிலையில், மலேசியாவில் இந்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு, உலக வர்த்தகச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, ‘சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் புதிய ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் சீன இறக்குமதிப் பொருட்களுக்குக் கடுமையான வரி விதிக்கப்படும். தற்போது சீனப் பொருட்களுக்கு 55 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும். அத்துடன், முக்கிய மென்பொருட்கள் மீதும் நவம்பர் 1ம் தேதி முதல் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இருப்பினும், தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அடுத்த சில வாரங்களில் சந்திக்க உள்ளதாகவும், அவருடனான தனது உறவு மிகவும் நன்றாக இருக்கிறது’ என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* ‘உங்க அம்மா தான் காரணம்’

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஹஃப்போஸ்ட் செய்தி நிறுவனத்தின் மூத்த செய்தியாளர் எஸ்.வி. டேட், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட்டிடம் குறுஞ்செய்தி வாயிலாகக் கேள்வி எழுப்பினார்.

உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதாக 1994ம் ஆண்டு புடாபெஸ்ட் ஒப்பந்தத்தில் ரஷ்யா உறுதியளித்ததையும், பின்னர் அந்த வாக்குறுதியை மீறியதையும் சுட்டிக்காட்டி, டிரம்ப்-புதின் சந்திப்பிற்கு புடாபெஸ்ட் நகரம் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த ஆழமான கேள்விக்கு கரோலின் லெவிட், ‘உங்க அம்மா தான் காரணம்’ என்று ஒற்றை வரியில் கிண்டலாகப் பதிலளித்தார்.

இந்த பதில் குறித்து செய்தியாளர் டேட் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பி, ‘இது வேடிக்கையாக இருப்பதாக நினைக்கிறீர்களா?’ என்று கேட்டபோது, கரோலின் லெவிட் மிகவும் கோபமான நீண்ட பதிலை அனுப்பினார். அதில், ‘யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளாத தீவிர இடதுசாரி ஆதரவாளர் நீங்கள். உங்களின் நேர்மையற்ற, ஒருதலைப்பட்சமான, முட்டாள்தனமான கேள்விகளை எனக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்’ என்று கடுமையாகக் கூறியிருந்தார். கரோலின் லெவிட்டிடம் குறுஞ்செய்தி சர்வதேச பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News