ரஷ்யா தாக்குதலால் உக்ரைனில் மின்தடை
கீவ்: உக்ரைனில் மின்கட்டமைப்புக்களை குறிவைத்து ரஷ்யா தாக்கி வருகின்றது. இந்நிலையில், நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலமாக உக்ரைன் எரிசக்தி வசதிகளை ரஷ்யா தாக்கியதாக உக்ரைன் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். உக்ரைனின் 8 பிராந்தியங்கள் தாக்குதலுக்கு பின் மின்தடையை சந்தித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமான டிடீஇகே கீவ் நகரில் மின்தடைகள் ஏற்பட்டதாக அறிவித்தது. தாக்குதலின் காரணமாக மத்திய பொல்டாவா பகுதியில் இயற்கை எரிவாயு பிரித்தெடுக்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரே இரவில் உக்ரைனில் 300க்கும் மேற்பட்ட டிரோன்கள், 37 ஏவுகணைகைளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement