தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரஷ்யா காகித புலி அல்ல... கரடி; சீண்டிய டிரம்புக்கு பதிலடி

 

Advertisement

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் போர் நீடித்து வருகிறது. இதனால் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பொருள் சேதமும் ஏற்பட்டு வருகிறது. போரை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷ்ய அதிபர் புதினை இதுவரை மென்மையாக கையாண்டு வந்த டிரம்ப், சமீபத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப், ‘ரஷ்யா ஒரு காகித புலி. ரஷ்யாவால் போரை விரைவாக வெல்ல முடியவில்லை. உக்ரைன் தனது இழந்த பகுதிகள் அனைத்தையும் ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்க முடியும். புதினும் ரஷ்யாவும் பெரும் பொருளாதார சிக்கலில் உள்ளனர். உக்ரைன் செயல்பட இதுவே சரியான நேரம்’ என்றார்.

இப்படி ரஷ்யாவை கேலி செய்யும் விதத்தில் டிரம்ப் பேசியதற்கு புதினின் செய்தி தொடர்பாளரும், கிரெம்ளினின் பத்திரிகை செயலாளராகவும் பணியாற்றி வரும் டிமிட்ரி பெஸ்கோவ், ஆர்பிசி வானொலியில் பேசுகையில், ‘ரஷ்யா ஒருபோதும் புலி அல்ல. அது பாரம்பரியமாகவே கரடியாக பார்க்கப்படுகிறது. காகிதத்தால் ஆன கரடி என்று ஒன்று இல்லை. ரஷ்யா ஒரு உண்மையான கரடி... அதில் காகிதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. 2022ம் ஆண்டு உக்ரைன் மீதான முழு அளவிலான தாக்குதலை தொடர்ந்து மேற்குலக நாடுகள் விதித்த தடைகள் காரணமாக சில பதட்டங்கள் இருந்தாலும், ரஷ்யா பொருளாதார நிலைத்தன்மையுடன் நீடிக்கிறது’ என்றார்.

 

Advertisement

Related News