ரஷ்யாவின் எம்.ஆர்.என்.ஏ. தொழில்நுட்பத்தில் தயாரான புற்றுநோய் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிப்பு..!!
ரஷ்யா: ரஷ்ய வின்ஞானிகள் உருவாக்கி உள்ள புற்றுநோய் தடுப்பூசி மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில கொரோனா தடுப்பூசிகளை போல எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்ட்ரோமிக்ஸ் என்ற புற்றுநோய் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கி உள்ளது. புற்றுநோய் செல்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் புரதங்களை உற்பத்தி செய்ய எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் உடலின் செல்களுக்கு கற்று கொடுக்கின்றன.
3 ஆண்டு பரிசோதனை உட்பட பல ஆண்டுகால ஆராய்ச்சியின் முடிவில் இந்த தடுப்பூசி மருத்துவ பயன்பாட்டிற்கு வருவதாக ரஷ்ய மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவன தலைவர் வெரோனிகா தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி பலமுறை செலுத்தினாலும் பாதுகாப்பானது என கூறிய அவர் புற்றுநோயின் வகையை பொறுத்து கட்டிகள் 60 சதவீதமுதல் 80 சதவீதம் வரை சுருங்கின. பெருங்குடல் புற்றுநோயை இலக்காக கொண்டு இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டதாகவும் மூளை புற்றுநோய், தோல் புற்றுநோய் தடுப்பூசி தயாரிப்பு பணிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெரோனிக்கா தெரிவித்தார்.