ரஷ்யாவின் எரிவாயு இறக்குமதியை நிறுத்த ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்..!!
ரஷ்யா: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை 2028ம் ஆண்டுக்குள் முழுமையாக நிறுத்த ஐரோப்பிய யுனியன் நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. ரஷ்யா அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் கிடைக்கும் நிதியை உக்ரைன் மீதான போருக்கு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில் ஐரோப்பிய யுனியன் நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளன.
Advertisement
இதன்படி புதிய எரிவாயு ஒப்பந்தங்கள் 2026 ஜனவரியிலும் நீண்டகால ஒப்பந்தங்கள் 2028 ஜனவரியிலும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு பெரும்பாலான ஐரோப்பிய யூனியன் நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இது விரைவில் சட்டமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement