ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்!
டெல்லி: அமெரிக்க நெருக்குதலை அடுத்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வங்குவதை நிறுத்த ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அரசின் கொள்கைக்கு ஏற்ப ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஆலோசிப்பதாக ரிலையன்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட், லூக்காயில் நிறுவனங்களிடம் இந்திய நிறுவனங்கள் கச்சா எண்ணெய் வாங்குகின்றன. இந்தாண்டு இறுதிக்குள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement