ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!
சென்னை: ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பல பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Advertisement
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க www.tnrd.gov.in என்கிற இணையதளத்தில் வரும் 30ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதன்படி, 70 ஈர்ப்பு ஓட்டுநர், 33 பதிவறை எழுத்தர், 151 அலுவலக உதவியாளர், 83 இரவுக் காவலர் என்று 300க்கு மேற்பட்ட காலியிடங்களை நிரப்படுகிறது. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும்.
Advertisement