தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்!

சென்னை: தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
Advertisement

விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும. மாணவர்கள் தேர்வுத்துறையின் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 12 முதல் 20ம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் 2024 டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி (சனிக்கிழமை ) நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பிக்கலாம் அறிவிக்கப்படுகிறது.

கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2024 -2025 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவராவார்கள்.

தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தேர்வுக்கான கட்டணம் ரூ.5/- சேவைக் கட்டணம் ரூ.5/- என மொத்தமாக ரூ.10/-னை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பணமாக பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்விற்கு விண்ணப்பிக்க 12.11.2024 முதல் 20.11.2024 வரை என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவியர் 50 மாணவர்) 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1000/- வீதம் வழங்கப்படும். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்க இயலாது

 

Advertisement