விதிமுறைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த வருமானவரி துறைக்கு ரூ.2 லட்சம் அபராதம்: உச்சநீதிமன்றம் அதிரடி
புதுடெல்லி: சென்னையை சேர்ந்த விஜய் கிருஷ்ணசாமி என்பவர் வீட்டில் கடந்த 2016ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதையடுத்து அப்போது கணக்கில் வராத ரூ.5 கோடியை அதிகாரிகள் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து விஜய் கிருஷ்ணசாமி வருமானவரி தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த தீர்ப்பாயம், இந்த விவகாரத்தில் அபராதம் இல்லாமல் வருமான வரியை செலுத்த உத்தரவிட்டது. இதையடுத்து விஜய் கிருஷ்ணசாமி மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை தனது சொந்த விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டுள்ளது. இது தவறான நடவடிக்கை ஆகும். இதுபோன்ற செயல்பாடுகள் வருமானவரி துறையின் முக்கியமான குறைபாடு ஆகும். எனவே நியாமற்ற முறையில் செயல்பட்ட வருமானவரி துறைக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து விஜய் கிருஷ்ணசாமிக்கு எதிராக வருமானவரித்துறை தொடர்ந்த ரத்து செய்து உத்தரவிட்டனர்.