ஆர்எஸ்எஸ் நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கை போல் கர்நாடகாவிலும் எடுக்க முதல்வர் சித்தராமையா உத்தரவு!
கர்நாடகா: தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் RSS நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது போல், கர்நாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு அளித்துள்ளார். தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து, அரசு கட்டடங்களில் RSS நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சித்தராமையாவுக்கு பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.
அரசு பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளைத் தடை செய்தல். வெறுப்பு மற்றும் தீவிரவாத சித்தாந்தத்திலிருந்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாக்க உறுதியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சாதி, மதத்தால் பிளவுபட்ட மக்களிடமிருந்து நாம் விலகி, அனைவரையும் நேசிக்கும் குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது குறுகிய மனப்பான்மையைக் கைவிட்டு, நாம் அனைவரும் பரந்த இதயம் கொண்ட மனிதர்கள் என்பதை உணர்ந்தால், ஒரு அழகான சமூகம் உருவாகும். அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளால் சமுதாயத்தில் பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் பிரியாங்க் கார்கே உள்ளிட்டோரின் கடிதம் கிடைத்த நிலையில் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. ஆனால், தற்போது சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தும் வகையிலும் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. எனவே, அதன் செயல்பாடுகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதே நேரம் , ஆர்எஸ்எஸ் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டில் எவ்விதம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேறு மாநிலங்களில் இது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன். அந்த தகவல் கிடைத்த பிறகு மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படும்’ என்றார்.