கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 கோடி ரூபாய் மோசடி: செயலாளர், கேஷியர் சஸ்பெண்ட்
இதில் பெரும்பாலானோர் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், கூட்டுறவு வங்கி செயலாளர் சங்கர், கேஷியர் பாரதி ஆகியோர், சங்க உறுப்பினர்களின் பெயர்களில் இருந்த பிக்சட் டெபாசிட்டை முதிர்ச்சி தேதிக்கு முன்பாகவே கணக்கை முடித்து, உறுப்பினர்களின் கையொப்பத்தை போலியாக போட்டு பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. அதன்படி ரூ.5 கோடி வரை கையாடல் செய்துள்ளனர். நீண்ட நாட்களாக இந்த மோசடி நடந்துள்ளது என்பதும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. நேற்று கூட்டுறவு இணை பதிவாளர் நாகராஜன் விசாரணை நடத்தினார். அப்போது வங்கி செயலாளர் சங்கர், கேஷியர் பாரதி ஆகியோர் ேமாசடிசெய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்றிரவு 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் செயலாளர் சங்கர், கேஷியர் பாரதி ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன் தலைமறைவாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.