தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டிசம்பர் 2023 முதல் ரூ.536.09 கோடி ஊக்கத்தொகையாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ்!

 

ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வரும் 3.80 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக ரூ.128.43 கோடி நிதி முதலமைச்சர் உத்தரவின்படி விடுவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2023 முதல் ரூ.536.09 கோடி ஊக்கத்தொகையாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் , ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வரும் 3.80 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.128.43 கோடி ஊக்கத்தொகை வழங்கி உத்தரவிட்டுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கடந்த 05.11.2022 முதல் ஆவின் பால் கொள்முதல் விலை பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.32/-லிருந்து ரூ.35/- ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.41/-லிருந்து ரூ.44/- ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளர்களிடையே கறவை மாடு வளர்ப்பை ஊக்குவிக்கவும் பால் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்திலும், கடந்த 18.12.2023 முதல் சங்கங்களுக்கு பால் வழங்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.3/- வீதம் பால் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.

கடந்த டிசம்பர் 2023 முதல் மார்ச் 2025 வரை தமிழ்நாடு அரசிடமிருந்து ரூ.407.66 கோடி பால் கொள்முதல் ஊக்கத் தொகை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3.80 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்து தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகளவில் பால் வழங்கி வருகின்றனர். மேலும் தற்போது ஏப்ரல் 2025 முதல் ஜூன் 2025 வரையிலான காலத்திற்கு பால் கொள்முதல் ஊக்கத்தொகையாக ரூ.128.43 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் பால் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாத்திட தேவையான அனைத்து உதவிகளையும் ஆவின் நிறுவனத்திற்கு தொடர்ந்து வழங்கி வருவதால், கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் பால் உற்பத்தி தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு, ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கி மென்மேலும் பொருளாதார மேம்பாடு அடைந்திடவும், கிராமப் பொருளாதாரம் உயர்ந்திடவும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.