குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
12:29 PM Jan 05, 2024 IST
Share
சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையிலும் பொங்கல் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்பட மாட்டாது.