ராயபுரம் போஜராஜன் நகரில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
சென்னை: சென்னை இராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் ரூ. 30.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணியை துவங்கி 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் 40 ஆண்டுகால கோரிக்கை வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வட சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் தெருவிற்கும்- மின்ட் பகுதிக்கும் இடையே கொருக்கு பேட்டை ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து செல்ல கூடிய விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் செல்ல கூடிய நிலையில் ரயில்வே கேட் மூடக்கூடிய நிலை ஏற்படும். இதன் காரணமாக இரு பகுதிக்கும் செல்ல கூடிய பொதுமக்கள் வெகு நேரம் நின்று செல்ல கூடிய நிலை உள்ளது.
அவசர மருத்துவ தேவைக்காக செல்ல கூடியவர்களும் செல்ல முடியாத நிலையில் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு 2022ம் ஆண்டு அக்டோபர் புதிய பணிகள் துவங்கப்பட்டு தற்போது ரயில்வேயுடன் இணைந்து பாலப்பணிகள் முடிக்கப்பட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்தார்.