ராயக்கோட்டையில் காலிபிளவர் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்
ராயக்கோட்டை : ராயக்கோட்டை பகுதியில் காலிபிளவர் சாகுபடி பரப்பளவை விவசாயிகள் அதிகரித்துள்ளனர். ராயக்கோட்டை பகுதியில் ஊட்டிக்கு இணையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் ஆங்கில காய்கறி வகைகளான முட்டைக்கோஸ், காலிபிளவர், நூக்கல், கேரட், பீட்ருட், பீன்ஸ் போன்றவற்றை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
Advertisement
ராயக்கோட்டை அருகே தின்னூர் பகுதியில் காலிபிளவர் சாகுபடி பரப்பினை அதிகரித்துள்ளனர். ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு 80 ஆயிரம் காலிபிளவர் நாற்றுகளை கட்டு பராமரித்து வருகின்றனர். பயிர் நன்றாக வளர களைகளை அகற்றியும், நோய் தாக்காமலிருக்க பூச்சிக்கொல்லி மருந்தடித்தும் கண்காணித்து வருகின்றனர். நாற்று நட்ட 70 நாட்களில், காலிபிளவர் அறுவடைக்கு வருவதாக கூறுகின்றனர்.
Advertisement