மிளகாய்பொடி பட்டப்பெயரை நீக்குங்க.. ரவுடி ‘மிளகாய்பொடி’ வெங்கடேசன் ஐகோர்ட்டில் மனு
இந்நிலையில், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமது தாயார் பதினைந்து ஆண்டுகள் மிளகாய்ப்பொடி வியாபாரம் செய்து வந்ததால் சிறையில் தன்னை மிளகாய்ப்பொடி என்ற பட்டபெயருடன் சிறை அதிகாரிகள் அழைக்கிறார்கள். இதனால் தாம் மன ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளேன். மிளகாய்ப்பொடியை தூவி கொலை செய்வீர்களா? என்று பலர் கிண்டலாக கேட்கிறார்கள். எனவே, ஆவணங்களில் உள்ள மிளகாய்ப்பொடி என்ற அடைமொழியை நீக்கக்கோரி புழல் சிறை நிர்வாகம், டிஜிபி உள்ளிட்டோருக்கு மனு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை தனி நீதிபதி தான் விசாரிக்க முடியும் எனக்கூறினர். இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.