தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செட்டிக்குளத்தில் ரவுண்டானா அமையுமா?.. பேரிகார்டுகள் வைத்து ஒத்திகை

நாகர்கோவில்: நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாக கோரிக்கையாக இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன் தனியாரிடமிருந்து நிலங்களை வாங்கிய பிறகு தான் சாலையை விரிவாக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக மாநகராட்சி மேயர் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கடந்த வாரம் ஆய்வு செய்த அவர் தற்போது பாதாள சாக்கடைக்கான குழாய் பதிக்கப்பட்டு சாலை சீரமைக்கப்பட வேண்டும்.

இந்த பணிகள் முடிவடைந்த உடன் ரவுண்டானா அமைப்பு தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது ரவுண்டானா அமைக்க சாத்திய கூறுகள் உள்ளதா? அவ்வாறு ரவுண்டானா அமைந்தால் நெருக்கடி இல்லாமல் வாகனங்கள் செல்ல வாய்ப்பாக இருக்குமா? என்பதை கண்டறியும் வகையில் தற்போது செட்டிக்குளம் சந்திப்பில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு சாலையை பிரித்து வாகனங்களை அனுப்பி வருகிறார்கள். இதில் நெருக்கடி இல்லாமல் வாகனங்கள் செல்கிறதா? என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது. இதில் நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் இருந்து செட்டிக்குளம் வரக்கூடிய வாகனங்கள் தான் அதிகளவில் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. எனவே இந்த பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

தற்போது கன்னியாகுமரியில் சீசன் காலம் என்பதுடன் கிறிஸ்மஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து விடுமுறை காலங்கள் என்பதால் அதிக அளவில் வாகனங்கள் வருகின்றன. இதன் காரணமாக வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் இந்த பகுதியில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் டிராபிக் போலீசார் நிறுத்தப்பட்டு வாகனங்களை நெருக்கடி இல்லாமல் அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.