5 குழந்தைகளை பெற்ற பின் காதலியை கைப்பிடிக்கும் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ
சவுதி: பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜியானா ரோட்டரிக்குயூசை திருமணம் செய்து கொள்ள உள்ளார். திருமணம் செய்து கொள்ளாமலே காதலித்து வந்த இந்த ஜோடிக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளனர். ஜார்ஜியானாவும், ரொனால்டோவும் கடந்த 2016ம் ஆண்டு ஸ்பெயினில் சந்தித்தனர். அப்போது கூக்கி நிறுவன கடையில் விற்பனையாளராக ஜார்ஜியானா இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. இந்த நட்பு 2017ம் ஆண்டு காதலாக மாறியது. அதன் பின், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு அலானா மாட்டினா, பெல்லா என்ற பெண் குழந்தை பிறந்தது.
மேலும் ரொனால்டோவின் மற்றும் மூன்று குழந்தைகளையும் ஜார்ஜியானா வளர்த்து வந்தார். இந்த தம்பதியினருக்கு 2022ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. அதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. இதனால் ரொனால்டோவும் அவருடைய காதலியும் மிகவும் துயரத்தில் இருந்தார்கள். இந்த தருணத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, விலை உயர்ந்த வைர மோதிரத்தை பரிசாக வழங்கி தம்மை திருமணம் செய்து கொள்ள கேட்டிருக்கிறார். இதற்கு ஜார்ஜினாவும் சரி என்று கூறி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவில் உள்ள அல் நஸ்ர் என்ற அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவின் குடும்பத்தினர் போர்ச்சுக்கலில் வசித்து வருகின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த தம்பதியினர் சவுதியில் நேரத்தை செலவழிப்பார்கள். ஏற்கனவே பல குழந்தைகள் பிறந்த நிலையில் ரொனால்டோ ஜார்ஜினாவை வெறும் காதலியாக தான் பார்த்து வந்தார். வெளிநாடுகளில் திருமணம் ஆன பிறகு விவாகரத்து பெற்றால் பாதி சொத்துகளை இழக்க நேரிடும். இதனை தவிர்ப்பதற்காக பல பிரபலங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.