தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாறைகளுடன் இடிந்து விழும் மண் திட்டுகளால் அபாயம்

Advertisement

ஊட்டி: கேத்தி பாலாடா - கெந்தளா இடையே புறவழிசாலையில் காட்டேரி அணை அருகே பக்கவாட்டு மண் சுவர் அடிக்கடி இடிந்து பாறைகளுடன் உருண்டு விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் - மஞ்சூர் சாலையில் கெந்தளா பகுதியில் இருந்து கேத்தி பாலாடா, கொல்லிமலை, எல்லநள்ளி பகுதிக்கு செல்ல சாலை உள்ளது. இச்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனிடையே மேட்டுப்பாளையத்தில் இருந்து பர்லியார் வழியாக ஊட்டி, கூடலூருக்கு பயணிப்போர் நெரிசலின்றி செல்ல வசதியாக குன்னூருக்கு 3 கிலோ மீட்டருக்கு முன்பாக காட்டேரி பகுதியில் இருந்து குந்தா சாலையில் சேலாஸ், கெந்தளா, கேத்தி பாலாடா, கொல்லிமலை, காந்திப்பேட்டை, லவ்டேல் வழியாக ரூ.46 கோடி மதிப்பில் புறவழி சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்காக பல இடங்களிலும் சாலை விரிவாக்க பணிகள் என்ற பெயரில் சுமார் 20 அடிக்கும் மேல் உயரமுள்ள மண் திட்டுகள் செங்குத்தாக ெவட்டப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் மண் திட்டுகள் வெட்டப்பட்ட இடங்களில் தடுப்புசுவர்கள் கட்டப்படவில்லை. இந்நிலையில் இச்சாலையில் காட்டேரி அணை அருகே வலதுபுறத்தில் பக்கவாட்டில் பல அடி உயரத்திற்கு மண் சுவர் இடிக்கப்பட்ட நிலையில், தடுப்புசுவர் இல்லாததால் இப்பகுதியில் அடிக்கடி மண் திட்டுகள் இடிந்து பாறைகளுடன் சாலைகளில் விழுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணித்து வருகின்றனர். பாறைகள் விழுவது குறித்து அறிந்தவுடன் உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் மண் மற்றும் பாறைகளை அப்புறபடுத்துவது தொடர்கதையாக உள்ளது. எனவே இப்பகுதியில் தடுப்புசுவர் கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement