வழிப்பறி வழக்கில் பறிமுதல் செய்த ரூ.75,000த்தை அபேஸ் செய்த பெண் இன்ஸ்பெக்டர்: ஆயுதப்படைக்கு மாற்றம்
கடலூர்: மூதாட்டியிடம் வழிப்பறி வழக்கில் பறிமுதல் செய்த ரூ75 ஆயிரத்தை அபேஸ் செய்த பெண் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் அம்மணியம்மாள்(60). இவர் சம்பவத்தன்று 100 நாள் வேலைக்கு செல்வதற்காக கொரக்கவாடி- பனையந்தூர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த பெரம்பலூர் மாவட்டம் கீழ புலியூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (39) என்பவர் லிப்ட் கொடுத்து, ஏரிக்கரைக்கு அழைத்து சென்று அவரது 3 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பினார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து முதாட்டியிடம் நகை பறித்த பிரபாகரனை கைது செய்து, 3 பவுன் செயின் மற்றும் ரூ.75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இதில் ரூ.75 ஆயிரத்தை கணக்கில் கொண்டுவராமல் இன்ஸ்பெக்டர் பிருந்தா கையாடல் செய்ததது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நராமநத்தம் இன்ஸ்பெக்டர் பிருந்தாவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.