கொஞ்சம் உடலை அசத்திட்டு போவோம்... கொள்ளை அடிக்க வந்த வீட்டில் குறட்டை விட்ட கொள்ளையன்: தட்டி எழுப்பிய வீட்டு உரிமையாளர்
Advertisement
தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி விசாரித்த போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காட்டூர் போலீசுக்கு ராஜன் தகவல் தெரிவித்தார். போலீசார் சென்று விசாரித்தனர். இதில், அவரது பெயர் பாலசுப்பிரமணியன் என்றும், கருமத்தம்பட்டி அருகே பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. ராஜன் வீடு பூட்டப்பட்டு இருந்ததால் கொள்ளையடிக்க வந்துள்ளார். சிறிது நேரம் தூங்கி விட்டு பொருட்களை கொள்ளை அடித்து செல்லலாம் என நினைத்த அவர் போதையில் அசந்து தூங்கி விட்டதால் மாட்டி கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர்.
Advertisement