தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சாலையோர கடைகளால் குன்னூர் மார்க்கெட் வியாபாரம் பாதிப்பு

*சப்-கலெக்டரிடம் புகார் மனு

குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வேறு கடைகளை வைத்து அன்றாட பிழைப்பு நடத்தி வருகின்றனர்.இதில் கிடைக்கும் பணத்தை வைத்தே கடைகளுக்கு வாடகை, மின் கட்டணம், தொழில் வரி, கொள்முதல் ஆகியவைகள் போக மீதமே வருவாயை ஈட்டி வருகின்றனர்.

இதனிடையே சாலையோரங்களில், வாகனங்களில் வந்து விற்பனை செய்து வரும் வியாபாரிகளால் மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருவதாக புகார்கள் எழுந்தது.

இதனை கண்டித்து அனைத்து வணிகர்கள் பொதுநலச்சங்கம் சார்பில் குன்னூர் சப்- கலெக்டர், டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். அந்த மனுவில் குன்னூர் மார்க்கெட்டில் அதிக வாடகையும், நிலுவைத் தொகையும், வட்டிக்கு கடன்களை வாங்கியும் பல இக்கட்டான நிலைமையில் நாங்கள் வாடகை தொகையை கட்டி வருகிறோம்.

தற்போது சமீபகாலமாக வாகனங்களில் பழங்கள், காய்கறிகள், துணிகள், காலணிகள், கீரைகள், பாத்திரங்கள் போன்றவைகள் போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாகவும் மார்க்கெட் முதல் பெட்போர்டு வரை சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி, வியாபாரம் செய்கின்றனர்.

இதனால் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எங்கள் குடும்பத்தில் உள்ள மருத்துவ செலவு, கல்வி கட்டணம் போன்றவற்றினால் எங்கள் வியாபாரம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதோடு, சுமைதூக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என்று பலரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறுப்பட்டிருந்தது.