சாலைகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: சாலைகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. "சாலைகளில் பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள், போலீசாரின் கடமை" என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.