தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாதாள சாக்கடை பணி முடிந்த இடங்களில் சாலை அமைக்க வேண்டும்

*நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

நெல்லை : பாதாள சாக்கடை பணி முடிந்த இடங்களில் சாலைகளை விரைந்து அமைத்து தரக்கோரியும், ராமையன்பட்டி குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பதை தடுக்கவும் நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ேகாரிக்கை விடுத்தனர்.

நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் நேற்று மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. துணை மேயர் கேஆர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் மேயர் ராமகிருஷ்ணன் பேசுகையில், ‘‘எனக்கு மேயர் பதவி வழங்கி கடந்த ஓராண்டாக மக்கள் பணியாற்றும் வாய்ப்பளித்த தமிழக முதல்வர், துணை முதல்வர், பொறுப்பு அமைச்சர் நேரு, கனிமொழி எம்பி., அப்துல் வஹாப் எம்எல்ஏ உள்ளிட்டோருக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2024-25ம் ஆண்டில் தேசிய அளவில் வாழ தகுதியுள்ள தூய்மையான மாநகரமாக நெல்லை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைத்த மாநகராட்சி பணியாளர்கள், மாமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.’’ என்றார். தொடர்ந்து ஓராண்டு நிறைவு செய்த மேயருக்கு பல்வேறு கவுன்சிலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

55வது வார்டு மார்க்சிஸ்ட் கவுன்சிலர் முத்து சுப்பிரமணியம்: எனது வார்டுக்கு உள்பட்ட தியாகராஜ நகர் பகுதி மேம்பாலம் அருகே தெருவிளக்குகள் கடந்த நான்கு மாதங்களாக எரியாமல் உள்ளது. மாநகராட்சி இடங்களை தனியார் ஆக்கிரமிப்பது அதிகரித்துள்ளது. அதனை தடுக்க வேண்டும்.41வது வார்டு கவுன்சிலர் சங்கீதா ராதாசங்கர்: ஓராண்டு பதவி காலத்தை சிறப்பாக பூர்த்தி செய்த மேயருக்கு நன்றி.

பெருமாள்புரம் விரிவாக்க திட்டத்தில் திட்ட சாலைகளை புதுப்பிக்க தங்கள் காலத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி தந்ததற்கும் நன்றி. பெருமாள்புரம் சி காலனியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து எங்கள் வார்டுக்கு குடிநீர் குறைவாக வருகிறது. எனவே மகிழ்ச்சிநகர் நீர்த்தேக்க தொட்டியிலிருந்து பெருமாள்புரம் சி காலனி குடிநீர் தொட்டிக்கு தனியாக பம்பிங் லைன் அமைத்துத் தர வேண்டும்.

36வது வார்டு கவுன்சிலர் சின்னத்தாய் கிருஷ்ணன்: ஓராண்டு காலத்தில் மாநகராட்சிக்கு நல்ல பல திட்டங்களை மேயர் கொண்டு வந்துள்ளார். எங்களது 36வது வார்டில் அண்ணாநகர் பாதாள சாக்கடை பணிகளை முடித்து அங்கு சாலைகள் அமைத்துத் தர வேண்டும். அண்ணாநகர் பகுதிக்கு நீர்த்தேக்க தொட்டியும் தேவை.

49வது வார்டு திமுக கவுன்சிலர் அலிஷேக் மன்சூர்: ஓராண்டு காலத்தில் மேலப்பாளையம் மண்டலத்திற்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்த மேயருக்கு நன்றி. எனது வார்டுக்குட்பட்ட ஆண்டவர் தெருவில் பகிர்மான குழாய்களை மாற்றி தர வேண்டும். கொட்டிக்குளம் அத்திமேட்டு கீழத் தெருவிலிருந்து போலீஸ் ஸ்டேஷன் ரோடு வரை மழைநீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும்.

5வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெகநாதன்: கடந்த ஓராண்டு காலத்தில் மேயர் எண்ணற்ற பணிகளை செய்து தந்துள்ளார். 5வது வார்டுக்குட்பட்ட திம்மராஜபுரம், கக்கன்நகர், காவலர் குடியிருப்பு ஆகிய இடங்களில் பாதாள சாக்கடைக்கு குழிகள் தோண்டிய காரணத்தால் சாலைகள் மோசமாக உள்ளது.

எனவே அங்கு சாலைகளை புதுப்பித்துத் தர வேண்டும். எனது வார்டுக்குட்பட்ட ரஹ்மத் நகரில் தனியார் வாரச் சந்தை அனுமதியில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

9வது வார்டு கவுன்சிலர் சுப்புலட்சுமி குணா: நெல்லை வரலாற்றிலேயே நல்ல எளிமையான மேயராக செயல்பட்டதற்கும், கவுன்சிலர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் செயல்பட்டதற்கு வாழ்த்துக்கள். உங்கள் பணிகள் மேன்மேலும் சிறக்கட்டும்.

6வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ்: (தூய்மை பணியாளர்கள் அணியும் சீருடையோடு வந்த அவர் தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து விளம்பர பதாகைகளையும் கொண்டு வந்தார்) தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிகள் எந்த நிலையில் உள்ளது, ராமையன்பட்டி குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பதால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

46வது வார்டு கவுன்சிலர் ரம்ஜான் அலி: மேலபபாளையம் மண்டலத்திற்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்த மேயருக்கு வாழ்த்துக்கள். கழிவு நீரோடை மற்றும் மழை நீர் வடிகால் ஆகியவற்றை மேலப்பாளையத்திற்கு சரி வர அமைத்துத் தர வேண்டும். அடுத்த பட்ஜெட்டில் மேலப்பாளையத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபுகானி: டவுன் மண்டலத்திற்கு கடந்த ஓராண்டில் எத்தனையோ நல்ல திட்டங்களை தந்தமைக்கு மேயருக்கு நன்றி. அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் இப்போது நடத்தப்பட்டு வருகின்றன.

47வது வார்டு கவுன்சிலர் சபிஅமீர் பாத்து: எங்கள் வார்டுக்கு குடிநீர் பிரச்னையைத் தீர்க்க 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைத்துத் தர வேண்டும்.

பாளை மண்டல சேர்மன் பிரான்சிஸ்: பாதாள சாக்கடை பணிகள் இப்போது எந்த நிலையில் உள்ளது?. புதிய குடிநீர் திட்டங்களுக்கான சாத்தியகூறுகள் என்ன என்பதை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன்: நெல்லை மாநகராட்சி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் 1763 சாலை பணிகள், அதாவது 326 கிமீ தூரத்திற்கு முடிந்துள்ளது. புதிய பாதாள சாக்கடை திட்ட பணிகள் இதுவரை 44 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 88 கி.மீ. சாலையை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் 80 சதவீதம் பாதாள சாக்கடை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரியநாயகி கூட்டு குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் தற்போது வரை உள்ளது. இத்திட்டத்தில் 33 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு, இதுவரை 24 ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளது. திருமலை கொழுந்துபுரம் குடிநீர் திட்டத்திற்கான பணிகளும் தொடங்கியுள்ளன.

பதவியேற்று ஓராண்டு நிறைவு மேயருக்கு கவுன்சிலர்கள் பாராட்டு

மேயரின் ஓராண்டு சாதனையை பாராட்டி கவுன்சிலர்கள் கந்தன், கோகுலவாணி சுரேஷ், சகாய ஜூலியட் மேரி, ரசூல்மைதீன், டாக்டர் சங்கர், அனார்கலி, மாரியப்பன், மன்சூர், பேச்சியம்மாள், ரவீந்தர் உள்ளிட்ட பலரும் பேசினர்.

மேயர் ராமகிருஷ்ணன் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி அவருக்கு எம்எல்ஏ அப்துல்வகாப், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் மோனிகா ராணா, துணை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

Related News