தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலைகள் அமைக்க கூடுதலாக ரூ.850 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: பேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

சென்னை: இந்த ஆண்டு சாலைகள் அமைக்க கூடுதலாக ரூ.850 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சட்டப்பேரவை கேள்வி நேர விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேருவிடம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில்,
Advertisement

"போஜராஜன் நகர் சுரங்கப்பாதை எப்போது நிறைவு பெறும்?: உறுப்பினர் மூர்த்தி கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

சென்னை ராயபுரம் போஜராஜன் நகர் சுரங்கப்பாதை 2 மாதத்திற்குள் இந்த பணிகளை முடித்து சுரங்கப்பாதை திறக்கப்படும். தி.நகர் மேம்பாலமும் 3 மாதத்தில் திறக்கப்படும். இந்தாண்டு சாலைகள் அமைக்க கூடுதலாக ரூ. 850 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என ராயபுரம் எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.

கொடுங்கையூர்: குப்பையில் மின்சாரம் தயாரிக்கப்படும்

ஆரணியில் குப்பை கிடங்கு இல்லாததால் சுடுகாடு, சாலையோரத்தில் குப்பை கொட்டுகின்றனர் என சட்டப்பேரவையில் சேவூர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆரணியில் இடத்தை காண்பித்தால் குப்பை கிடங்கை அமைக்கிறோம். சென்னை கொடுங்கையூர், கோவை, மதுரையில் இந்த ஆண்டு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க உள்ளோம் என சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் பதில் தெரிவித்தார்.

நாகர்கோயில் பகுதியில் மக்கும், மக்கா குப்பைகள் வசதி ஏற்படுத்தி தர வாய்ப்புள்ளதா?: தளவாய் சுந்தரம் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் குப்பைகள் கிடங்கிறகு இடம் கிடைப்பது சிரமம். பொதுமக்கள் வீடுகளிலே மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரித்து தரப்படும். குப்பை கொட்டும் கிடங்கு அமைக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கம்பம் நகராட்சியில், திடக்கழிவில் இருந்து உரம் தயார் செய்து விவசாயிகளுக்கு விலை இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?": உறுப்பினர் ராமகிருஷ்ணன் கேள்விக்கு அமைச்சர் பதில்

பல்வேறு நகரங்களில் குப்பை மேலாண்மை மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. நிறைய இடங்களில் பயோ மைனிங் முறையில் குப்பைகளை அகற்றி நிலமாக மாற்றி உள்ளோம்.

பல இடங்களில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலத்தை இந்த இடத்தில் அமைக்க வேண்டாம் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே குப்பை மற்றும் கழிவுநீர் பிரச்னையை கையாள பொதுமக்களின் கருத்துகளை அறிய வேண்டி உள்ளது என பதில் தெரிவித்தார்.

கோடை காலத்தில் சென்னையில் தங்கு தடையின்றி குடிநீர்

கோடை காலத்தில் சென்னையில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

Advertisement

Related News