சென்னையில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு!!
சென்னை: சென்னையில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்தார். பெரம்பூரில் சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதியதில் சிறுமி ரித்திகா(16) உயிரிழந்தார்.ஓட்டேரியில் சாலை தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் புதுப்பேட்டை மெக்கானிக் இக்ரம் உசேன் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த இளம்பெண் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement