ரிதன்யா தற்கொலை - விசாரணை அதிகாரியை மாற்ற மனு
Advertisement
திருப்பூர் : திருப்பூரில் புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், விசாரணை அதிகாரியை மாற்றக் கோரி அவரது தந்தை அண்ணாதுரை ஐ.ஜி அலுவலகத்தில் மனு அளித்தார். விசாரணை தாமதமாக நடப்பதாகவும், விரைந்து வழக்கை முடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். ரிதன்யா கடந்த ஜூன் 28 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Advertisement