தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2015ல் நடந்த ஆம்பூர் கலவர வழக்கு 106 பேர் விடுதலை ; 22 பேருக்கு சிறை, போலீசார், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு, திருப்பத்தூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திருப்பத்தூர்: கடந்த 2015ம் ஆண்டு நடந்த ஆம்பூர் கலவர வழக்கில் 106 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 22 பேருக்கு சிறை தண்டனையும், படுகாயமடைந்த போலீசாருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டது.  வேலூர் மாவட்டம், அணைக்கட்டை சேர்ந்த பவித்ரா என்ற பெண் காணாமல் போனது தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது என்ற வாலிபரை, அப்போதைய இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் தலைமையிலான போலீசார் அழைத்துச் சென்றனர்.

Advertisement

விசாரணையின் போது, அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 2015 ஜூன் 26ம் தேதி உயிரிழந்தார். போலீசார் தாக்கியதாலேயே உயிரிழந்ததாக ஷமீல் அகமதுவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதில் ஷமீல் அகமது உறவினர்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி 2015 ஜூன் 27ம் தேதி ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேருந்துகள், காவல்துறை வாகனங்கள், மதுபான கடை, தனியார் மருத்துவமனை மற்றும் கடைகள் சேதப்படுத்தப்பட்டது. இதில் 71 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 132 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 128 பேர் மீது திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்‌ நேற்று தீர்ப்பு வெளியானது.

நீதிபதி மீனாகுமாரி அளித்த தீர்ப்பில், 106 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ததாக விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 22 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. பெண் காவலர்களை மானபங்கம் செய்தது, காவல்துறையினரை கற்களால் அடித்து கொலை செய்ய முயற்சி செய்தது, கொடிய ஆயுதங்களுடன் தாக்கியது உள்ளிட்ட பிரிவின் கீழ் இவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

மேலும் விடுதலை செய்யப்பட்ட 106 பேர் பொது சொத்துக்களை சேதம் செய்தது தொடர்பாக, இதற்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட மமக ஆம்பூர் முன்னாள் எம்எல்ஏ அஸ்லாம் பாஷா (தற்போது இறந்து விட்டார்) சொத்தை பறிமுதல் செய்து செலுத்த வேண்டும். குற்றவாளிகளில் ஒருவர் இறந்துவிட்டார். மீதி 21 பேருக்கு 16 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.

படுகாயம் அடைந்த காவலர் விஜயகுமாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், பெண் காவலருக்கு ரூ.10 லட்சமும், பாதிக்கப்பட்ட சாட்சிகள் 10 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டை மாவட்ட எஸ்பி சியாமளாதேவி தமிழக அரசிடம் இருந்து ஒரு மாத காலத்திற்குள் பெற்று தர வேண்டும். இதனை அஸ்லாம் பாஷா மற்றும் எதிரியின் அமைப்பிடமிருந்து வசூலித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். மொத்தம் 22 பேருக்கும் ரூ.4 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Advertisement