மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கடல் உரிமைச்சட்டம் கொண்டு வரவேண்டும்: அகில இந்திய மாநாட்டில் தீர்மானம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அகில இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் கூட்டமைப்பின் நான்காவது மாநாடு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. மாநாட்டில் சிஐடியு அகில இந்திய தலைவர் ஹேமலதா, பொதுச்செயலாளர் சுகுமாறன், கூட்டமைப்பின் தலைவர் தேபாசிஸ் பர்மன், பொதுச்செயலாளர் புல்லுவிளா ஸ்டான்லி ஆகியோர் பங்கேற்று பேசினர். மாநாட்டில் முக்கிய தீர்மானங்களாக வன உரிமைச் சட்டத்தைப் போல, நம் நாட்டின் மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் கடல் உரிமைச் சட்டம் கொண்டு வரவேண்டும். மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடும்போது இறப்பு ஏற்பட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் காப்பீடு நிதியாக வழங்கிட வேண்டும். மீன்பிடி படகுகள், வலைகளுக்கு ஏற்படும் எதிர்பாராத சேதாரங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.