கம்பம் நகர்மன்ற தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி
Advertisement
தேனி: கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் மீது உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக கம்பம் நகராட்சி ஆணையர் உமா சங்கர் அறிவித்துள்ளார். 33 உறுப்பினர்கள் கொண்ட கம்பம் நகராட்சியின் தலைவராக வனிதா நெப்போலியன், துணைத் தலைவராக சுனேதா உள்ளனர். திமுக உறுப்பினர்கள் 16 பேர், அதிமுக உறுப்பினர்கள் 6 பேர் என 22 பேர் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டுவந்தனர். விதிப்படி 33 பேரில் 27 பேர் நகர்மன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய நிலையில் 19 பேர் மட்டுமே இருந்தனர். ஐந்தில் 4 பங்கு பேர் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி என அறிவித்துள்ளார்.
Advertisement