இந்திய ரிசர்வ் வங்கியில் ஆபீசர் மற்றும் மேனேஜர்
1. லீகல் ஆபீசர்- கிரேடு பி: 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1). வயது வரம்பு: 21 லிருந்து 32க்குள் இருக்க வேண்டும். தகுதி: சட்டப் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. மேனேஜர் (டெக்னிக்கல்-சிவில்) கிரேடு- பி: 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-1). வயது வரம்பு: 21லிருந்து 35க்குள் இருக்க வேண்டும். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. மேனேஜர் (டெக்னிக்கல்- எலக்ட்ரிக்கல்)- கிரேடு-பி: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-2).
வயது: 21லிருந்து 35க்குள்.
தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது/ ஒபிசியினருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/மாற்று்திறனாளிகளுக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2025.