செல்போனுக்கு வாங்கிய கடனை கட்டத் தவறினால் செல்போன் முடக்கம்: நிதி நிறுவனங்களை அனுமதிக்க ரிசர்வ் வங்கி திட்டம்
சென்னை: கடனை திருப்பி செலுத்தாதவரின் செல்போன் இயக்கத்தை முடக்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில், பெரும்பாலனோர் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், நுகர்வோர் கடனில் பெரும்பகுதி வகிக்கும் செல்போன் விற்பனையில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வாராக்கடன் அதிகரிப்பைத் தடுக்கும் வகையில், கடனை திருப்பிச் செலுத்தாதவரின் செல்போனை முடக்கும் நடவடிக்கை எடுக்க நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்க உள்ளதாக தெரிகிறது. கடனை கட்டத் தவறினால், செல்போன் செயலிழக்கச் செய்யப்படும் என்று தெரிகிறது. எனினும் முடக்கப்படும் செல்போனின் தனிப்பட்ட தகவல்களின் ரகசியம் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ரிசர்வ் வாங்கி வலியுறுத்தியுள்ளது.