இட ஒதுக்கீடு கேட்டு மீண்டும் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
Advertisement
வன்னியர் சங்கம் 1980 ஜூலை 20ம் தேதி தொடங்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு அவர்களுடைய சாதி வாரியாக அதற்கேற்ப அவர் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது தான் முதல் கோரிக்கை. தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் வைத்துள்ளோம். முதல்வரை கோட்டையில் சந்தித்து நான் வலியுறுத்தி உள்ளேன். ஆனால் அது நிலுவையில் உள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement