ஆய்வு பணிக்காக சென்ற ரயில் மோதி பெண் சாவு
தேனி: மதுரையில் இருந்து போடி நோக்கி ஆய்வு பணிக்கு ெசன்ற ரயில் மோதி 15 ஆடுகளுடன் பெண் உயிரிழந்தார். மதுரையில் இருந்து போடி வரை ஆய்வு பணிக்காக 130 கிலோமீட்டர் வேகத்தில் நேற்று ரயில் சென்றது. இந்த ரயில், தேனி - மதுரை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே சென்றபோது, அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தேனி அருகே அரண்மனைபுதூர் கிராமத்தை சேர்ந்த பத்ரகாளி (52) என்பவர் ரயில் வருவதை பார்த்து ஆடுகளை வேகமாக விரட்ட முயன்றார்.
Advertisement
அதற்குள் ரயில் பத்ரகாளி மீது மோதியதோடு தண்டவாளம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 15 ஆடுகள் மீதும் மோதிவிட்டு சென்றது. இதில் பத்ரகாளி உடல் சிதறி பலியானார். ஆடுகளும் உயிரிழந்தன. ஆய்வுக்கு சென்ற ரயில் மோதி ஆடுகளோடு பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement