தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலைஞர் நினைவிடத்தில் காலையில் வைத்த கோரிக்கையை மாலையில் நிறைவேற்றிய முதல்வர்: குழந்தையின் தந்தை நன்றி

Advertisement

சென்னை: ெமரினா கடற்கரையில் காது கேட்கும் கருவி கேட்டு காலையில் முதல்வரிடம் கோரிக்கை வைத்த நிலையில் மாலையில் நிறைவேற்றியதற்கு முதல்வருக்கு குழந்தையின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தன்னுடைய மகளை மெரினா கடற்கரைக்கு சுற்றிப் பார்க்க அழைத்து சென்றுள்ளார். கடற்கரையை சுற்றிப்பார்த்த பின்பு கலைஞர் நினைவிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது முதல்வர் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று பின்னர் வெளியில் வரும் போது மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த முதல்வரிடம், ‘எனது மகளுக்கு 50 சதவீதம் தான் காது கேட்கிறது.

அதற்கான கருவிகள் எங்கும் இல்லை, ஸ்டான்லி மருத்துவமனையிலும் விசாரித்துட்டேன் எங்கேயும் கிடைக்கவில்லை. குழந்தை 6ம் வகுப்பு போயிருக்கிறாள். கொஞ்சம் சீக்கிரம் கிடைக்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்’’ என்று காலையில் முதல்வரிடம் குழந்தையின் தந்தை கோரிக்கை வைத்தார். இதையடுத்து மாலை 6 மணிக்குள் குழந்தைக்கு காது கேட்கும் கருவிகள் கிடைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு குழந்தையின் தந்தை முதல்வருக்கு நன்றி தெரிவித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து குழந்தையின் தந்தை பேசியதாவது: திரிசூலம் பகுதியில் இருந்து பள்ளி விடுமுறை என்பதால் குழந்தையை மெரினா கடற்கரைக்கு அழைத்து சென்றேன். கடற்கரையை சுற்றிப் பார்த்து விட்டு கலைஞர் நினைவிடத்திற்கு சென்றேன். அப்போது முதல்வர் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று விட்டு வெளியில் வந்தார். நாங்கள் மக்களுடன் கூட்டத்தில் நின்று கொண்டு இருந்தோம். அப்போது முதல்வரை பார்த்து வணக்கம் வைத்தேன். உடனே முதல்வர் எங்களை நோக்கி வந்து, ‘சொல்லுங்கள்..’ என்று கேட்டார். என்னுடைய பெண்ணுக்கு காது பிரச்சனை இருக்கிறது, சீக்கிரமாக சரி பண்ணித்தர வேண்டும் என்று காலையில் தான் கோரிக்கை வைத்தேன். மாலை 6 மணிக்குள் காதுக்கான கருவி கிடைத்தது. இப்போது அந்த கருவி மாட்டியதால் நன்றாக கேட்கிறது என மகள் மகிழ்ச்சியில் இருக்கிறாள், நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என முதல்வருக்கு நன்றி கூறினார்.

Advertisement

Related News